சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை – ஜாதிக ஹெல உறுமய

Gotabaya-Rajapaksa5

சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாடும் தனது இறைமையை பணயம் வைக்க விரும்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே பொருத்தமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வெறுமனே நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிசாந்தி குமாரசுவாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டi விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கைள நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: ,

Leave a Reply