தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஸுமாவின் விசேட பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவே நாம் அங்கு செல்லவுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

sumanthiran1தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவின் அழைப்பின் பேரில் நாளை மறுதினம் (புதன்) தென்னாபிரிக்காவுக்கு பயணமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவினால் இலங்கை விவகாரத்தை கையாள்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

தென்னாபிரிக்கா உயர்மட்டத் தலைவர்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயற்கிரமங்கள் குறித்து இலங்கையுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதுகுறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் தங்கள் தூதுக்குழுவினர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயற்கிரமம் குறித்து தென்னாபிரிக்காவுடன் கலந்துரையாடப் போவதில்லையெனவும் தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதி சிறில் ரமா போசாவையே சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திகதி குறிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான அவரது விஜயத்திற்கு முன்பதாகவே கூட்டமைப்பினர் அவருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளனர். மேற்படி ஆணைக்குழு செயற்கிரமத்தை கற்றுக் கொள்வதிலான ஆர்வத்தை இலங்கை வெளிப்படுத்தியதையடுத்தே தென்னாபிரிக்கா அண்மையில் அரச தூதுக்குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது.

ஜெனீவாவில் அண்மையில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலான அமெரிக்க ஆதரவிலான இலங்கை மீதான வாக்கெடுப்பிலும் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதை தவிர்த்திருந்ததும் இலங்கையர்களால் எட்டப்படக்கூடிய நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றையே தான் ஆதரிப்பதாகவும் அது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply