மனிதர்கள் குரலையும் தானம் செய்ய முடியுமாம்!

voiceஉறுப்பு தானத்திற்கு அடுத்தபடியாக, மனிதர்கள், தங்களுடைய குரலையும் தானம் செய்ய முடியும், என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின், ´நார்த்வெஸ்ட்´ பல்கலைக்கழக பேராசிரியர், ரூபல் படேல் மற்றும் அவரது நண்பர், டிம் பனேல் ஆகியோர், ´வோகல் ஐடி´ என்னும் புதிய தொழில்நுட்பத்தின்படி, நோயாளியின் குரலை அகற்றிவிட்டு, தானம் செய்தவரின் குரலுடன் இணைத்து உள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் படேல் கூறியதாவது, இதில் நோயாளியின் வயது, பாலினம் மற்றும் குரல் அளவுக்கு ஏற்ப, குரல் தேர்வு செய்யப்படும். இந்த நவீன தொழில் நுட்பத்தின் மூலம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், தங்களுக்கு விருப்பமான குரலைப் பெற்று மகிழலாம்.

குரலை தானம் அளிப்பவர் தொடர்ந்து, இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தங்களுடைய குரலை பதிவு செய்யவேண்டும். பலதரப்பட்ட சொற்களை உச்சரிக்க வேண்டும்.

இந்தக் குரல்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப, குரலின் தரம் மற்றும் பயன் இருக்கும். இவ்வாறு, படேல் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply