சொந்தநிலத்திற்கு எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் சில முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு விட்டுக்கொடுப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேரா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் போது வலி.வடக்கு காணி சுவீகரிப்பு விடயத்துடன் தெற்கு நெடுஞ்சாலை வீதி அகலிப்பிற்கான காணி சுவீகரிப்பினையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் போது எனது சொந்த காணியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சொந்த நிலத்திற்கு எல்லோருக்கும் ஆசை தான் ஆனால் சில காரணங்களுக்கு விட்டுக்கொடுத்தல் வேண்டும் என்றும் கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

















