போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை, மேற்குலக நாடுகளுக்கு பிரச்சினையாக மாறிவிட்டது: நாமல் ராஜபக்ஷ

Namal_Rajapaksa

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயல்களினால் நாட்டின் முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் நாட்டின் முக்கியமான தலைவர்களை மாத்திரம் கொலை செய்யவில்லை. பௌத்த பிக்குகள் உட்பட நாட்டில் வாழும் சகல இன மக்களையும் கொலை செய்தனர்.

30 வருட போர் வரலாற்றில் நாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெற்றன. எனினும் போரின் இறுதிக்கட்டத்தின் நான்கு நாட்களை பற்றி மட்டுமே இப்போது பேசுகின்றனர்.

விடுதலைப் புலிகளின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான முக்கிய தலைவர்களை கொலை செய்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனைக் கூட மறந்து விட்டு தற்போது வெளிநாட்டு சக்திகளுக்கு உந்து சக்தியை கொடுத்து வருகின்றனர்.

மேற்குலக நாடுகளால் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று கூறிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை, அவர்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது.

முன்னேறிய நாடுகள் என தம்மை கூறிக்கொள்ளும் நாடுகள் பயங்கரவாதத்தின் தாக்கங்களை எதிர்நோக்கி வருகின்றன.

அந்நாடுகளில் அரசியல் கலாசாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் போரை முடிவுக்கு கொண்டு வந்த தற்போதைய இலங்கை அரசாங்கம், முழு நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறது எனவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply