இலங்கை விவகாரத்தில் ஐ.நா தோல்வி கண்டதனை பான் கீ மூன் மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார்

Pan-Kee-Moon

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோல்வி கண்டதனை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்ததனை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூவான்டா இனச் சுத்திகரிப்பு இடம்பெற்ற 20 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும், அதனை தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய பொறிமுறைமையை உருவாக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பொருளாதார காரணிகளினால் உறுப்பு நாடுகளினால் முரண்பாடு இடம்பெறும் நாடுகளின் விவகாரங்களில் முழு அளவில் பங்களிப்பினை செலுத்த முடிவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், மனிதப் பேரவலங்கள் இடம்பெறும் போது அதனை தடுத்து நிறுத்த சிறந்த பொறிமுறைமையை ஒன்றை அமைப்பது உலகின் அனைத்து நாடுகளினதும் தார்மீக பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மக்களை உரிய முறையில் பாதுகாக்கத் தவறும் போது சர்வதேச சமூகம் அந்த விடயங்களில் தலையீடு செய்ய நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply