ஹங்கேரி அதிபர் தேர்தல். அதிபர் Viktor Orban மீண்டும் வெற்றி.

Viktor Orban

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஹங்கேரி நாட்டின் அதிபர் தேர்தல் நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்தது. இந்த தேர்தலில் ஹங்கேரி அதிபர் Viktor Orban மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். அதிபரின் centre-right Fidesz கட்சி 45% வாக்குகளையும், அவருக்கு எதிராக போட்டியிட்ட centre-left opposition alliane என்ற கட்சி 25% வாக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் obbik party என்ற கட்சி 21% வாக்குகளையும் பெற்றுள்ளது.

ஹங்கேரி அதிபர் Viktor Orban இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டதோடு, தான் மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் வாய்ப்பளித்ததால், தான் மிகவும் பொறுப்புடன் தனது பணிகளை கவனிக்க உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தனது ஆட்சியில் தீர்வு காண முயல்வதாகவும் கூறியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply