நாளை ஒரே நேர்கோட்டிற்கு வரும் சூரியன்,பூமி மற்றும் செவ்வாய். தோஷங்கள் ஏற்படுமா?

moon

நாளை பூமி, சூரிய மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அதிசய நிகழ்வு நாளை நடக்க இருக்கிறது. பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் சூரியனை சுற்றிவர 687 நாட்களும் எடுத்துக்கொள்கின்றன. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.

மூன்று கிரகங்களும் ஒரே நேர்கொட்டில் வருவதால் ஏதாவது தோஷம் ஏற்படும் என சில பொதுமக்கள் கருதுவதாகவும், அவர்கள் நாளை சிறப்பு பூஜைகள் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பூமியில் இருந்து 57.4 மில்லியன் மைல்கள் தூரத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை நாளை பார்த்தால் பத்து மடங்கு பெரியதாக இருப்பதுபோன்ற தோற்றமாக இருக்கும் என கூறபடுகிறது. இந்த மூன்று கிரகங்களின் நேர்கோட்டு நிகழ்வை சூரியன் மறையும் போது பார்க்கலாம் என்றும், விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2012ஆம் இந்த மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Tags: , , ,

Leave a Reply