இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்று ஒன்றும் இல்லை: மஹிந்த ராஜபக்ச!

Mahinda-Rajapaksa1

இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்று ஒன்று இல்லை அவ்வாறு இருக்கவும் முடியாது, என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த தேசிய ஐக்கிய மாநாட்டில் உரையாற்றிய அவர்,

இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கோட்பாட்டின் கீழ் சமமான உரிமைகள் உள்ளன.

எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே வசதிகள் உள்ளன. எந்தப் பாகுபாடும் கிடையாது. இது தான் எனது கொள்கை. இதனையே மகிந்த சிந்தனை வலியுறுத்துகிறது.

எந்தவொரு சிறுபான்மையினரும் இங்கு இருக்க முடியாது. நாம் அனைவரும் தாய்நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள்.

இதுதான் உண்மை. எவரும் இதனை நிராகரிக்க முடியாது. எல்லா சமூகங்களினதும் கலாசாரங்களை நாம் பாதுகாக்கிறோம்.

சிலர், சமூகங்கள், மதங்கள், சாதிகளைக் காரணம் காட்டி மக்களைக் பிரிக்கப் பார்க்கிறார்கள்.

அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply