கரடியின் வயிற்றில் குடித்தனம் நடத்தும் வினோத மனிதர்….

man_inside_bear_003.w540

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள கரடியின் வயிற்றில் இரு வாரங்களாய் நபர் ஒருவர் தஞ்சம் புகுந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Museum of Hunting and Wildlife என்னும் வனவிலங்கு அருங்காட்சியகத்தில் உள்ள கரடியின் வயிற்றில் ஆப்ரகாம் போயின்சேவல்(43) என்ற நபர் கடந்த 13ம் திகதி வரை தங்கப்போகின்றார்.

தான் யாருடைய கண்ணிலும் படபோவதில்லை என கூறிய இவர் விதைகள், காளான், பூச்சிகள், மீன்கள் உள்ளிட்ட தின்பண்டங்களை உண்பதற்கு வைத்துக்கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் 30 லிட்டர் நீர் மற்றும் படுக்கையுடன் கரடியினுள் குடிபெயர்ந்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு கரடினுள்ளேயே உறங்கி கொண்டிருப்பேன் என்றும் தினமும் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

இதேபோல் விசித்திரமான முயற்சியை செய்ய எண்ணிய ஆப்ரகாம் கடந்த 2002ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை நடந்தே வலம் வந்தது குறிப்பிடதக்கது.

Tags: , ,

Leave a Reply