பிரபுதேவாவின் நள்ளிரவு பார்ட்டியில் விஜய்-சிம்ரன்.

starsinside1

பிரபுதேவா வைத்த நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் விஜய்,சிம்ரன், லட்சுமிராய், ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடன இயக்குனர், நடிகர் , இயக்குனர் என பலவித அவதாரங்கள் எடுத்த பிரபுதேவா சமீபத்தில் தனது பிறந்தநாளை மும்பையில் வெகு சிறப்பாக கொண்டாடினார். கோலிவுட்டில் உள்ள தனது நெருங்கிய நண்பர்களுக்கும் பிறந்தநாள் பார்ட்டி வைப்பதற்காக கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார் பிரபுதேவா.

ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் பார்ட்டியில் விஜய்,சித்தார்த், சுந்தர் சி, இயக்குனர் ஷங்கர், விஷால், சிம்ரன், ராதிகா, லட்சுமிராய், வரலட்சுமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நள்ளிரவு ஆரம்பித்த இந்த பார்ட்டி, இரவு முழுவதும் விடிய விடிய நடந்தது. நீண்ட நாள் கழித்து பிரபுதேவா, தனது கோலிவுட் நண்பர்களை சந்தித்து மனம்விட்டு பல விஷயங்கள் பேசியதாக கூறப்படுகிறது,.

Tags: , , , ,

Leave a Reply