உலக கிண்ண பரிசு ; அரிசி விலை அதிகரிப்பு

rice

இலங்கை அணி 20 / 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டதற்கு பரிசாக அரசாங்கம் அரிசியின் விலையை அதிகரித்துள்ளது. கொழும்பு மற்றும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்களிலும் அரிசியின் விலை 10 முதல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரதகாமுல்ல மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களிலும் அரசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் படி, 65 ரூபாவாக இருந்த ஒரு கிலோ நாட்டரிசியின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 84 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply