வவுனியாவில் இளம் பெண்ணின் படம் ஆணொருவருடன் நிர்வாணமாக பேஸ்புக்கில் வந்ததால் நேற்று (07.04) குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் வீதிக்கு அண்மையில் வசித்து வந்த 29 வயதுடைய குறித்த பெண்ணின் படத்துடன் சேர்த்து ஆண்( பாஸ்ரர்) ஒருவரின் படமும் பேஸ்புக்கில் நிர்வாணமாக வந்ததால் நஞ்சுண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அதாவது அப்பெண்ணின் முகத்தை நிர்வாணப் பெண்ணின் படத்துடன் இணைத்து, அத்தோடு அப்பெண்ணின் நண்பரான ஆண்(பாஸ்ரர்) ஒருவரின் படத்தையும் அப்புகைப் படங்கள் பேஸ்புக் (முகநூளில்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும்வேளை பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பிறிதொரு சம்பவம் ஒன்றில் வெளிநாட்டில் உள்ள இளம்வயது இளைஞர் ஒருவர் (சுமார் 20வயது), தனக்கு (இவர்) வவுனியாவில் உள்ள போது திருமணம் பேசி மோதிரம் மாற்றிய இளம்வயதுப் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த போதும், இவர் வெளிநாடு வந்த பின்னர் ஸ்கைப் மூலம் எடுத்த தனிப்பட்ட (அரைகுறை நிர்வாணப்) புகைப்படங்களை, தற்போது அப்பெண் இவரது நடவடிக்கை சரியில்லை எனக் கூறி, “திருமணம் முடிக்கவோ, அவருடன் பேசவோ” மறுத்ததன் காரணமாக புதிதாக பேஸ்புக் ஒன்றைத் திறந்து, பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண்ணால் வவுனியா போலீசில் முறையிட்டதன் எதிரொலியாக அந்த பேஸ்புக் நிறுத்தப்பட்டு, அதே பெயரில் பிறிதொரு நாட்டில் உள்ள அவ்விளைஞனின் நண்பர்கள் மூலம் மீண்டும் பதிவேற்றம் செய்து உள்ளார். (சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது அவ்விளைஞனின் நண்பர்களும் ஆபத்தில் சிக்க உள்ளனர்)
இது குறித்து வெளிநாட்டில் உள்ள தமிழ் அரசியல் முக்கியஸ்தரும், அவரது நண்பர்களும் அவ்விளைஞனுடன் உரையாடியதன் எதிரொலியாக அப்படங்கள் தற்போது நீக்கம் செய்யப் பட்டுள்ளது.
இந்த கீழ்த்தரமான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் அவ்விளைஞனின் வெளிநாட்டில் உள்ள பெற்றோர், வவுனியாவில் உள்ள சகோதரங்கள் ஆகியோரின் விபரங்கள், படங்கள் உட்பட அவ்விளைஞனின் சகல விபரங்களும் அனைத்து இணையங்களிலும் பிரசுரிக்கப்பட்டு பகிரங்கப் படுத்தப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
பிந்திக் கிடைத்த தகவலின்படி..
அவ்விளைஞன் மீண்டும் முதலில் ஆரம்பித்த (முகவரியற்ற) பழைய முகநூலையே மீண்டும் ஆரம்பித்து, தற்போது அவரது நண்பர்கள் மற்றும் அவர் வெளிநாட்டில் கல்வி பயிலும், பாடசாலைக் கம்பியூட்டர்கள் மூலம் படங்களை தரவேற்றுவதாகவும், இதுகுறித்து முதல்கட்டமாக இலங்கையிலும், வெளிநாட்டிலும் அவ்விளைஞனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதன் பின்னரும் இவை தொடரும் பட்சத்தில் அவ்விளைஞனின் வெளிநாட்டில் உள்ள பெற்றோர், மற்றும் (வவுனியா பஸ்நிலையத்தில் வர்த்தக நிலையம் ஒன்றை வைத்துள்ள) சகோதரர் உட்பட அக்குடும்பத்தை சேர்ந்த அனைவரது விபரமும் வெளியாகும் என சம்பந்தப்பட்டவர்கள் அறியத் தருகின்றனர்.

















