மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும்!- அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர்

mannar_deads

மன்னார் மனித புதைகுழி ஓர் மயானமாகும் என அகழ்வாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம், குடிநீர் குழாய்களை புதைப்பதற்காக குழி தோண்டிய போது, மாந்தைப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட தோண்டும் பணிகளின் போது, சுமார் 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்துக்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில்இ இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சேனாரத் திசநாயக்க கருத்து வெளியிடுகையில்,

அகழ்வாராய்ச்சி அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இது ஒரு மயானம் என்பது தெரியவந்துள்ளது.

இறுதிக் கிரியைகள் முறைப்படி நடாத்தப்பட்டு சடலங்கள், நல்லடக்கம் செய்யயப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் போரின் போது உயிரழந்த படையினர் அல்லது பொதுமக்களின் சடலங்கள் அல்ல.

1930களில் உயிரிழந்து முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் சடலங்களாகும்.

இது மயானமன்று எனவும் பாரிய மனித புதைகுழி எனவும் சிலர் போலிப் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை, இடுகாடு என்று நிறுவ இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், அந்த இடத்தில் இடுகாடு ஒன்று இருந்தமைக்கான எந்த வரலாற்று சான்றுகளும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Tags: , , ,

Leave a Reply