வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளது: ஜே.வி.பி.

vijitha

வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி உயர்வடைந்துள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கின்றது.

போலியான புள்ளி விபரத் தகவல்களையே அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது.

பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக அறிவித்த போதிலும், பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், இவை நம்பக் கூடிய வகையில் உள்ளதா?

தனிநபர் வருமானம் இரண்டு டொலர்களுக்கும் குறைந்தவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தெகையின் 42 வீதமாகும்.

நாளுக்கு நாள் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு அதிகரிக்கின்றது.

ஜேம்ஸ் பாக்கருக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம் சாதாரண பொதுமக்களின் மீது பாரிய வரிச் சலுகைகளை சுமத்துகின்றது என குறிப்பிட்டார்.

மக்கள் நலனை கருத்திற் கொண்ட வரிக்கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்: சிறிரங்கா

மக்கள் நலனை கருத்திற் கொண்ட வரிக்கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார்.

2020ல் உலகில் உணவுப் பிரச்சினை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

விவசாய உற்பத்திகளுக்கான வரிகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ட்ரக்ரர்களுக்கான வரிகளை அதிகரித்துள்ள அரசாங்கம் சொகுசு வாகனங்களுக்கான வரிகளை குறைத்துள்ளது.

விவசாயிகளின் வாகனங்களுக்ககே வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply