ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே விசாரணைகளில் அரசாங்கம் பங்கேற்க வேண்டும். எமது நாட்டில் உள்ள சிறந்த சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்று எம்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதாடி வெற்றி பெறவேண்டும். இதன் மூலம்தான் எமது பக்க நியாயத்தை முன்வைக்க முடியும். அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரையும் பாதுகாப்பதுடன் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல சபையில் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவா பிரேரணையானது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சமமாகும்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பும்போது நீதிமன்றில் அவர் ஆஜராகவேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்றம் வழக்கை தனித்து விசாரித்து தீர்ப்பு வழங்கும். இதேநிலைதான் தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் அரசாங்கம பங்கேற்காவிட்டால் தனித்து விசாரணை நடத்தப்பட்டு தீர்பு வழங்கப்படும். விசாரணையில் கலந்துகொள்ளாவிட்டால் சொத்துக்களை முடக்குவது பயணத் தடை வெளிநாட்டு முதலீட்டு முடக்கம் போன்ற பொருளாதார தடைகளுக்கும் நாடு முகங்கொடுக்க நேரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதிசேர் .வரி உள்நாட்டு அரசிறை நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதார சேவை அறவீட்டு வரிகளின் திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு வாசிப்பு விவாத்தில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

















