தமிழர்கள் நாடு திரும்பாமைக்கு அரசின் நடவடிக்கையே காரணம்; தகவல் வெளியிட்டது விக்கி லீக்ஸ்

wikileaks-logo

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்ப விரும்பாதமைக்கு இலங்கை அரசின் செயற்பாடுகளே காரணம் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் பெற்றீசியா ஏ புட்டினிஸ் அரசிடம் தெரிவித்திருந்ததாக, விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வொஷிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புட்டினிஸ் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி, உதவி .ராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக்கின் வலியுறுத்தலுக்கு அமைவாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்துள்ளார். இதன் போது சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமை, எம். ரி.வி வலையமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலர் ஹிலரி கிளின்டன் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை விதிக்க முற்படுவதாக கூறிய, பாலித்த கோஹன்னவை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை போன்ற விடயங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இவ்வாறான அரசின் முறையற்ற செயற்பாடுகள் வெளிநாடுகளுக்கு பிழையான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அதனாலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து, அபிவிருத்திகளுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று புட்டினிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக போகொல்லாகம உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply