ஜோ்மனில் சந்தேகமான அமைப்புகளை காவற்படையினர் சுற்றி வளைத்துத் திடீர் சோதனை

German7)_CI

ஜேர்மன் நாட்டிலுள்ள சந்தேகமான அமைப்புகளை காவற்படையினர் சுற்றி வளைத்துத் திடீர் சோதனையிட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அனாதைக் குழந்தைகளுக்குப் பணம் திரட்டுவதாகப் பதிவு செய்யப்பட்ட லெபனான் அமைப்புகள், கிஸ்பொலா இயக்கத்திற்குப் பணத்தை அள்ளி இறைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டின் ஆறிற்கு மேற்பட்ட மாநிலங்களில் அமையப் பெற்ற அத்தகைய அமைப்புகளின் அலுவலகங்களும், சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளும் சோதனைக் குட்படுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மன் மத்திய அரசின் உள்விவகாரச் செயலகம் தெரிவித்துள்ளது. உண்மையான நோக்கத்தை மூடிமறைக்க அனாதைக் குழந்தைகளின் நாமம் பயன் படுத்தப்படுவதைப் போன்ற துரோகம் கிடையாதெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சேகரி
க்கப்பட்ட பணம் தற்கொலைப் படையினரின் குடும்பங்களைப் பராமரிக்கப் பாவிக்கப் படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலைப் படையினரின் குடும்பங்களைப் பராமரிக்கும் திட்டமானது, தற்கொலைப் படையில் ஆட்கள் சேர்வதற்கான நிலையை அதிகரிக்கச் செய்வதோடு, தியாகிகளின் குழந்தைகளை தற்கொலைப் படையில் சேர்ப்பதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தொடர் இருப்பிற்கு எதிராக நேரடியகவோ, மறை முகமாகவோ, ஜேர்மன் மண்ணில் செயற்படும் சகல அமைப்புகளும், ஜேர்மனியில் மக்கள் ஒன்றுகூடி ஐக்கிய அமைப்புக்களை உருவாக்கும் உரிமைச் சட்டத்தைத் தமக்கு செளகரியமாக உபயோகிக்க முடியாதென, ஜேர்மன் நாட்டின் உள் விவகாரச் செயலர் எடுத்துக் காட்டியதோடு, அத்தகைய சகல அமைப்புகளையும் உடனடியாகத் தடை செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

ஈரான் உதவிவரும் ஷீட்முஸ்லீம்களின் கிஸ்பொலா இயக்கம் லெபனானில் தங்கியிருந்து, இஸ்ரேலிற் கெதிராகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு கிஸ்பொலா இயக்கம் வேறு பல நாடுகளின் பிளவுகளிலும், பிரச்சனைகளிலும் ஆயுதம் தாங்கிப் பங்கு கொள்வது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சிரிய நாட்டு இனப் போரிலும் கிஸ்பொலாவின் குறுக்கீடு, சிரியா தேசத் தலைவர் பஷார் அல் அசாத்தை ஆதரிப்பதும் அங்கு இடம் பெற்ற பல குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பொறுப்பானதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply