விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடுகடத்துமாறு வெளிநாடுகளிலுள்ள சிங்களவர்கள் இலங்கை அரசிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடேல் பாலசிங்கத்தை தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் நிலையில், அவரை நாடுகடத்தி, இலங்கைக்கு கொண்டு வந்து தூக்கிலிட வேண்டும் என வெளிநாட்டு வாழ் சிங்களவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
அடேல் பாலசிங்கத்தை இலங்கை கொண்டு வருவதன் மூலம் முனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச நிலைப்பாடுகளை மாற்ற முடியும் என ஆலோசனையும் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த சிங்களவர்களே இவ்வாறு மனு கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. கடந்த மாதம் விடுதலை புலிகளின் ஊடக பிரிவை சேர்ந்த நந்தகோபன் என்பவர் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















