500 அடி உயரமுள்ள பிரிட்டனின் மிகப்பெரிய கட்டிடத்தின் கண்ணாடியை சுத்தம் செய்யும் மலையேறும் வீரர்கள்.

clean

இங்கிலாந்து நாட்டின் மிக உயரமான கட்டிடங்களுள் ஒன்றான Beetham Tower in Manchester என்ற கட்டிடத்தின் முன்புற கண்ணாடிகளை சுத்தம் செய்யும் ஒப்பந்தம் ஒன்றை மலையேறும் பயிற்சி பெற்ற இருவர் எடுத்து, சுத்தம் செய்யும் பணியை செய்து வருகின்றனர்.

500 அடி உயரமுள்ள இந்த கட்டிடத்தில் 47 மாடிகள் உள்ளது. இந்த கட்டிடத்தின் முன்புற கண்ணாடிகளை அனைத்தும் தளங்களிலும் சுத்தம் செய்யும் பணியை சமீபத்தில் David Smith, என்ற 32 வயது நபரும், Anthony Marshall, என்ற 33 வயது நபரும் ஒப்பந்தம் எடுத்துள்ளனர். இருவரும் மலையேறும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது உள்ளிருந்து பலர் இருவருக்கும் வாழ்த்து கூறியவண்ணம் இருந்தனர்.

இந்த கட்டிடத்தின் உரிமையாளர் Tony Camilleri, என்ற 51 வயது தொழிலதிபர், இந்த கட்டிடத்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்யும் பணி என்பது மிகவும் ரிஸ்க் ஆனது. ஆனால் அதே நேரத்தில் மிகவும் த்ரில்லான அனுபவமாக இதை செய்பவர்களுக்கு இருக்கும் என்றார். இந்த ஒப்பந்தம் என்ன தொகைக்கு செய்யப்பட்டது என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் யாராலும் ஊகிக்க முடியாத மிகப்பெரிய தொகை இந்த பணியை செய்துகொண்டிருக்கும் இருவருக்கும் கொடுக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தற்போது 23 மாடிகள் வரை சுத்தம் செய்யும் பணியை இவர்கள் முடித்துவிட்டார்கள். இன்னும் சிலநாட்களில் இந்த பணியை இவர்கள் செவ்வனே செய்து முடித்துவிடுவார்கள் என்றும் அதன்பின்னர் இவர்களும் மில்லியனர்களில் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply