சீனாவில் பயங்கர மண்சரிவு. 8 பேர் உயிருடன் புதைந்து பலியான பரிதாபம்.

china

சீனாவில் நடந்த ஒரு பயங்கர மண்சரிவு விபத்தில் 8 பேர்கள் வரை உயிருடன் புதைந்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப்படைகள் மீட்புபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சீனாவில் உள்ள northern province of Shanxi, என்ற பகுதியில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு காரணமாக 2000 கனமீட்டர் அளவிலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கிடையே பலர் புதைந்துள்ளனர். இதுவரை 8 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் கிடைத்துள்ளது. ஏராளமானோர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்பட்டுகிறது.

சீனாவின் மீட்புப்படைகள் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே புதைந்த ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் மண்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் சீனாவில் பலியாகி வருவது தொடர்கதையாகவே இருக்கின்றது.

Tags: , ,

Leave a Reply