சீனாவின் கைகளில் நுரைச்சோலை அனல் மின் நிலையம்?

Nuraicholai-Power-plant_CI-285x150

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிடம் கையளிக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் செனுஜன் தசநாயக்க தெரிவித்தார்.

எனினும் இந்த உடன்படிக்கை மூலம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீனாவிற்கு கையளிக்கப்படவுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் வதந்தி பரப்பி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் உடன்படிக்கையில் அவ்வாறு ஒன்றும் நடக்காது என அவர் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply