அவுஸ்த்ரேலியா அரசாங்கம் கடந்த 2012 ம் ஆண்டு ஆவனி மதம் 13ம் திகதிக்கு பின் படகு மூலம் அகதிகளாக வந்து புகலிட கோரிக்கையாளர்களுக்கு தனது கடுமையான சட்ட திட்டங்களை வலுப்படுத்தி இருந்தது .
இதன் மூலமாக புகலிட கோரிக்கையாளர்களுக்கு தோழி ல் செய்வதற்கோ படிப்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை அவர்கள் கொடுக்கும் சிறு பணதினைக்க் கொண்டு வீட்டுவடகை சாப்பாடு என சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர் .
திருமணம் செய்தவர்கள் தாய் தந்தை உறவுகளை இழந்து தனியாக வாழும் இவர்களின் நியைக்க் கண்டும் கூட மனித நேயமிக்க இந்த நாடு அகதிகளை உயிர் இருந்தும் நடமாட முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது
ஆனால் இங்கு அகதிகளுக்காக போராடும் அமைப்புகள் இது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கல் நடத்தியும் இதுவரைக்கும் எந்தவிதமான முனேற்றமும் காணப்படவில்லை .
அரசாங்கம் தற்ப்போது நிரந்தர பாதுகாப்பு விசா நடைமுறைப்படுத்துவதாக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது அது தொடர்பாகவும் எந்தவிதமான முடிவுகளும் இதுவரை வரவில்லை .
இந்த நிலையில் வழக்குகள் யாவும் முடிவடைந்த நிலையில் உள்ள அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்கள் நாளுக்கு நாள் இரகசியமாக நாடுகடத்தும் செயற்பாடுகளும் நடந்த வண்ணமே இருக்கின்றது .
தற்போது அரசாங்கம் தனது சட்டத்தினை மேலும் வலுப்படுத்தி உள்ளது அதாவது code of behaviour என அச்சிடப்பட்ட படிவத்தில் கடுமையான சடதிட்டங்கள் உள்ளடக்கப்பட்டு அகதிகளாக வந்த அனைவரிடத்திலும் கைஜோப்பம் வாங்கப்படுகின்றது . இந்த அரசாங்கம் சட்டத்தினை வலுப்படுத்த காரணம் யார் ?
















