தமிழ் முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ளத் தடையில்லை – ருவான் வனிகசூரிய

Ruwan_Wanigasuriya

தமிழர்களும், முஸ்லிம்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ளத் தடையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.எனினும், தமிழ் இளைஞர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தற்போதைக்கு வெற்றிடங்கள் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ள எவ்வித தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் படையில் இணைந்து கொள்ள எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும், அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். 1949ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி; தமி;ழ் முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் அவர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்ள எவ்வித தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைக்கு 400 தமிழ் பேசும் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்தும் படையில் இணைந்து கொள்ள விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply