அரசாங்கம் கிராமத்து சண்டியரைப் போன்று செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் அடிப்படையிலான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
விசாரணை நடாத்தி பொருளாதாரத் தடை விதித்தால் அதனால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர்.
ஏற்கனவே மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் மேலும் நிலைமைகள் மோசமடையக் கூடும்.
நாட்டின் உண்மையை நிலைமைகளை அரசாங்கம் மூடிமறைக்கின்றது.
அரசாங்கம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது, எனினும் மக்களின் கைகளில் பணமில்லை.
விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய நேரிடும்.
வாழ்க்கைச் செலவு பாரியளவில் உயர்வடைந்துள்ளது மக்கள் வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்னர் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்காத அரசாங்கத்தில் எந்தப் பயனும் இல்லை!– சிறிரங்கா
அப்பாவி வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்காத அரசாங்கத்தினால் எந்தப் பயனும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொது மக்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படவில்லை.
கசினோ சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு நலன்களை வழங்காத எந்தவொரு அரசாங்கத்தினாலும் பயன் கிடையாது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கூட உயர்த்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

















