அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை: பசில் ராஜபக்ச

mahinda-basil

இலங்கையின் அபிவிருத்திகளுக்காக பௌத்த மதகுருமார் உட்பட அனைத்து மதகுருமாரின் ஆசிகளையும் ஆலோசனைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பார்ப்பதாக பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

சுதந்திரத்துக்கு பின்னர் தற்போது நாடு அதீத அபிவிருத்திகளை அடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் அபிவிருத்திகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. எனினும் அந்த கட்சிகளில் உள்ள பலர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கண்டு பொறாமைப்படுகின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் மாகாணசபைகளில் அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் அதன் அபிவிருத்திகளை மையமாகக் கொண்டே கிடைத்தது என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

மக்கள் இந்த அபிவிருத்திகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமையால் தாம் ஆட்சிக்கு வரமுடியாதிருக்கும் என்பதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் அபிவிருத்திகளை குறைக்கூறுகின்றன என்று பசில் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply