பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் உள்ள 16 பிரிவினைவாதத்துக்கு உதவும் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அரச பத்திகைக்கு தகவல் அளித்துள்ள அவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய யோசனையின் அடிப்படையிலேயே இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த தடையின்கீழ், மேற்கத்தைய நாடுகளில் திறந்த நிலையில் செயற்படும் குறித்த அமைப்புக்கள் இலங்கையுடன் மறைமுகமாக தொடர்புகளை கொண்டிருப்பதுவும் தடுக்கப்படும் என்று கோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோஹன, ஒரு பிரிவினரின் கருத்துக்களுக்காக நாட்டின் எதிர்காலத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

















