திருமாவளவனை துரத்திய தேனீக்கள்: பிரசாரத்தில் பரபரப்பு

Thirumavalavan

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேனீக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திருமாவளவன் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வாரணவாசியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் மதிய உணவு சாப்பிட கோயில் எசனை–வெங்கனூர் கிராமங்களுக்கிடையே ஊராட்சிக்கு சொந்தமான ஒரு தோப்பில் தோழமை கட்சியினருடன் அமர்ந்துள்ளார்.

அப்போது, அங்கு மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து அனைவரையும் துரத்த ஆரம்பித்துள்ளது. தேனீக்களிடமிருந்து தப்பிக்க திருமாவளவன் தனது வாகனத்தில் ஏற முயன்றபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது நெற்றியில் தேனீ கொட்டியுள்ளது.

மேலும், அங்கு இருந்த அனைவரையும் துரத்த ஆரம்பித்த தேனீக்கள் திருமாவளவன் தம்பி செங்குட்டுவன், வெங்கனூரை சேர்ந்த கலியபெருமாள் உள்ளிட்ட 22 பேரையும் கொட்டியுள்ளன.

தொண்டர்களை சுமார் 1 கி.மீட்டர் தூரம் வரை தேனீக்கள் துரத்தி சென்றுள்ளன. பாதுகாப்புக்காக வந்திருந்த பொலிஸாரும் தங்களது வாகனத்தில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேனீக்கள் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தேனீக்கள் கொட்டிய திருமாவளவன் உள்பட 22 பேருக்கும் வெங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மற்றும் மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

Tags: , ,

Leave a Reply