நீதிமன்றத்தின் ஊடாக தடைக்கு சவால் விடுக; தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு கூறுகின்றது பாதுகாப்பு அமைச்சு

supremecourt

இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள், நீதிமன்றங்கள் ஊடாகத் தமக்கெதிரான தடைக்கு சவால் விடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு.

அண்மையில் இலங்கை அரசு 16 புலம்பெயர் அமைப்புகளையும், 424 தனிநபர்களையும் தடை செய்வதாக அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதுடன், தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

“”2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னணியிலேயே குறித்த தடைப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தமது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையை இரத்துச் செய்து கொள்ள முடியும். ”என்று தெரிவித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு.

Tags: , ,

Leave a Reply