பொதுமக்கள் மிக அமைதியாக வாழ ஏற்ற நாடுகள் எவை? சர்வே முடிவு. கனடாவுக்கு 8வதுஇடம்.

canada-flag

உலகில் மக்கள் மிக அமைதியாக வாழ ஏற்ற நாடுகள் எவை என்ற சர்வே சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சர்வேயை Global Peace Index என்ற நிறுவனத்திற்காக IEP (Institute for Economics and Peaceஎன்ற அமைப்பு எடுத்துள்ளது. அந்தந்த நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளின் அடிப்படையில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் வன்முறை மற்றும் தீவிரவாத பயமின்றி மக்கள் வாழ்வதாகவும், அந்த நாட்டினால் பிற நாடுகளுக்கு எவ்வித பயமுறுத்தலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சர்வேயில் கனடா எட்டாது இடத்தையும், ஆஸ்திரேலியா 16வது இடத்தையும் பிடித்துள்ளது., பொதுமக்கள் சிறிதும் அமைதியின்றி வாழும் நாடாக ஆப்கானிஸ்தான் தேர்தெடுக்கப்பட்டு சர்வேயில் கடைசி இடமான 162 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 142வது இடத்தில் உள்ளது.

இந்த சர்வேயின்படி முதல் இருபது இடங்களை பிடித்த நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்த நாடுகள் பெற்ற புள்ளிகளின் விபரங்கள் பின்வருமாறு:

1 Iceland 1.162
2 Denmark 1.207
3 New Zealand 1.237
4 Austria 1.250
5 Switzerland 1.272
6 Japan 1.293
7 Finland 1.297
8 Canada 1.306
9 Sweden 1.319
10 Belgium 1.339
11 Norway 1.359
12 Ireland 1.370
13 Slovenia 1.374
14 Czech Republic 1.404
15 Germany 1.431
16 Australia 1.438
16 Singapore 1.438
18 Portugal 1.467
19 Qatar 1.480
20 Bhutan 1.487

Tags: , , ,

Leave a Reply