பெண்களின் மனதை புரிந்து கொள்ள எவராலும் இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை தங்கள் பின்னால் அலைய விடுவது பெண்களுக்கு பிடித்தமான விடயம். • பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு. • பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயற்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். • பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்பிராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி. • எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயற்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு. • எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் எதையும் வைத்து பேசாமல் கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் ஆண்களைத் தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும். எப்பொழுதும் ஜென்டில் மேன் செயற்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும். • பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும். • பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து ஞானத்தோடு பேசுங்கள். இதுபோன்ற செயற்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும்.
வாசகர்கள் இணைப்பில்
Current 368 Users Online
![]()
Like us on Facebook
இணையத் தளங்கள்
| தமிழ்ச் செய்திகள் |
| - தமிழ் |
| - ஈழமுரசு |
| - பி.பி.சி தமிழோசை |
| - புதினப்பலகை |
| - அதிர்வு |
| - செய்தி.காம் |
| - பதிவு |
| - சங்கதி |
| - வன்னி மீடியா |
| - ஈழநாதம் |
| - பொங்கு தமிழ் |
| தமிழ் சஞ்சிகைகள் |
| - உதயன் |
| - தினக்குரல் |
| - வீரகேசரி |
| - விகடன் |
| - குமுதம் |
| - தினத்தந்தி |
| - விடுதலை |
| - தினபூமி |
| - தினமணி |
| - மாலைச்சுடர் |
| - மாலைமலர் |
| - தினமலர் |
| - நக்கீரன் |
| ஆங்கிலச் செய்திகள் |
| - தமிழ்நெற் |
| - றொய்ரேர்ஸ் |
| - எம்.எஸ்.என்.பி.சி. |
| - யாகூ |
| - பி.பி.சி. |
| - தமிழ்கார்டியன் |
| - கூகிள் |
| - வேள்ட்நியுஸ் |
| - சி.என்.என். |
| - |
| சினிமா செய்திகள் |
| - கிசுகிசு.காம் |
| - தமிழ்ஹீரோ.காம் |
| - சினிமா எக்பிரஸ் |
| - வெப் டுனியா |
| - இந்தியா க்ளிக்ஸ் |
| களிப்பூட்டும் தளங்கள் |
| - TamilTV.com |
| - Einthusan |
| - ThiruttuVCD |
| - Tubetamil |
| - Runtamil |
| - FlyinHD |
| சமூக தளங்கள் |
| - Youtube |
| - Wikipedia |
| - Yahoo |
| மின்னஞ்சல்கள் |
| - கூகிள் மின்னஞ்சல் |
| - ஹொட்மெயில் |
| - யாஹூ! |

















