நடிகை அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் இடையே இருந்த ரகசியக் காதல் அம்பலத்துக்கு வந்துள்ள நிலையில், கூடவே தனது திருமணத் திட்டத்தின் செய்தியை மறைப்பதற்காக அமலாபால் செய்த இன்னொரு தந்திரமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவரது இந்த தந்திரத்தில் சிக்கியவர் நடிகர் ஆர்யா.
முன்னதாக கடந்த மார்ச் 27-ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாபாலுக்கும் திருமணம் என்ற செய்தி ஒரு ஆங்கில நாளிதழிலும், ஒரு குறிப்பிட்ட இணையதளத்திலும் வெளியானது. அந்தச் செய்தியில் உள்ள புகைப்படம் அமலாபாலின் கழுத்தில் ஆர்யா தாலி கட்டுவது போல இருந்ததால் சக மீடியாக்கள் அது உண்மைதான் என்று நம்பி அப்படியே பரப்பி விட்டன.
ஆனால் டைரக்டர் விஜய் உடனான தனது உண்மைக் காதலை மீடியாக்களிடமிருந்து மறைப்பதற்காகவே அமலாபால் திட்டமிட்டு இப்படி ஒரு சீப்பான பப்ளிசிட்டியில் இறங்கியிருக்கிறார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
வருகிற ஜூன்12- ஆம் தேதி அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்தச் செய்தியை எப்படியாவது மீடியாக்களிடமிருந்து மறைக்க திட்டமிட்டார் அமலாபால்.
அதற்காக பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் அவர் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த ஒரு திருமணக் காட்சி புகைப்படத்தை தனக்கு நெருக்கமான இரண்டு பெண் நிருபர்களுக்கு கொடுத்திருக்கிறார். அவர்களும் அதை செய்தியாக்கி ஆர்யாவுக்கும், அமலாபாலுக்கும் திருமணம் என்று எல்லோரும் நம்பும்படி செய்தியை வெளியிட்டு விட்டனர்.
ஆனால் அமலாபால் அப்படி பாதுகாத்து வைத்திருந்த திருமண ரகசியத்தை ‘சைவம்’ ஆடியோ பங்ஷனில் வெளிச்சம் போட்டு காட்டினார் நடிகர் பார்த்திபன். விழாவில் பேசிய பார்த்திபன் டைரக்டர் விஜய் விரைவில் ‘அமலா’க்கப் பிரிவில் சிக்கப் போகிறார் என்று மேடையிலேயே சூசகமாக சொல்லிவிட்டார். அன்று மாலையே அமலாபால் டைரக்டர் விஜய் திருமணச் செய்தி அடுத்தடுத்து மீடியாக்களில் பரவ ஆரம்பித்தது.
இதனால் அவசரம் அவசரமாக தனது சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் டைரக்டர் விஜய் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் இந்தியா வந்தவுடன் எங்களது எதிர்கால திட்டங்கள் குறித்துச் சொல்லுவோம். அதுவரை அமைதியாக இருக்கவும் என்று தனது திருமணச் செய்தியை வேறு வழியில்லாமல் சொல்லி விட்டார்.
டைரக்டர் விஜய்யை திருமணம் செய்யப்போவது உண்மை என்றிருக்கும் போது ஏன் தேவையில்லாமல் தனது சுயநலத்துக்காக அமலாபால் ஆர்யாவை இழுத்துவிட வேண்டும் என ஆர்யாவின் நண்பர்களான இளம் ஹீரோக்கள் டென்சனானார்களாம்..
டிவிஸ்ட் இல்லாம இந்த நடிகைகளின் வாழ்க்கை போரடிக்கும் போல..

















