சந்திரிக்காவுக்கு எதிராக ஊடக தாக்குதலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

Mahinda-Rajapakse

ஊடகங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிரான தாக்குதல்களை தொடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு நெருக்கமான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தனக்கு நெருக்கமான அமைச்சர்களை அலரி மாளிகையை நேற்று முன்தினம் வரவழைத்த ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் அரசியலுக்கு வரப் போவதாக முன்னாள் ஜனாதிபதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதனால் குழப்படைந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைச்சர்களான திலான் பெரேரா, மேர்வின் சில்வா, நிர்மல கொத்தலாவல, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோரை அழைத்து, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊடகங்கள் மூலம் விமர்சன ரீதியான தாக்குதல்களை தொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான ஊடக நடவடிக்கைளில, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசுடன் இணைந்து கொண்டவர்களையோ, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ போன்றவர்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்.

இதனடிப்படையில், புலம்பெயர் தமிழர்களின் தாளத்திற்கு ஆட்டம் போடும் ஐரோப்பிய நாடுகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை ஆட்சிக்கு கொண்டு வரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுமாறும் இதன் போது கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை, அமைச்சர் அழகபெரும வழங்கியதாக தெரியவருகிறது.

Tags: , ,

Leave a Reply