தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுத அமைப்பொன்று தோற்கடிக்கப்பட்ட பின்னர், அதன் அரசியல் பிரிவை தடை செய்யாத உலகில் ஒரே நாடு இலங்கை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டுள்ளது.
அதனை தடை செய்யாத காரணத்தினால், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களின் மனைவிமார் மக்கள் பிரதிநிதிகளாக செயற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

















