புலம்பெயர் புலிகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய

nishantha sri warnasinghe_CI

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே நாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கைகளின் மூலம் நந்தகோபன் என்ற புலி உறுப்பினர், மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். நந்தகோபன், நோர்வே நெடியவன் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நந்தகோபனை கைது செய்ததனைப் போன்றே ஏனைய புலிச் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்கு சர்வதேச புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நெடியவன், வீ.ருத்ரகுமாரன், இமானுவல் பிதா, அடெல் பாலசிங்கம் போன்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ நாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply