ஹன்சிகா மீது பட அதிபர் புகார் சிம்புவின் தூண்டுதல் காரணமா?

simbu-hansika

“அஜித்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர், ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி. இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து ‘வாலு’ என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். விஜய் சந்தர் என்ற புது இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சிம்புவுக்கும் கதாநாயகி ஹன்சிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது கேரவானுக்குள்ளேயே குடும்பம் நடத்தினார்கள். வாலு படத்தின் நான்கு பாடல் காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டநிலையில், சிம்பு – ஹன்சிகாவின் காதல் முறிந்து போனது. இருவரும் பிரிந்த பிறகு ‘வாலு’ படம் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தவிர்க்க நினைத்ததினால் இருவருமே கால்ஷீட் தராமல் இழுத்தடித்தனர். பிறகு ஒரு வழியாக சிம்பு கால்ஷீட் தர ஒப்புக் கொண்டார். ஹன்சிகாவோ கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில், ‘வாலு’ படத்தை தயாரித்து வரும் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி, ஹன்சிகா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். ‘‘வாலு படத்துக்காக ஹன்சிகாவுக்கு 70 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அதில் 55 லட்சத்தை கொடுத்து விட்டேன். பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி 15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன். அப்படியும் ஹன்சிகா, ‘வாலு’ படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரால் மே அல்லது ஜூன் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறுகிறார். அவ்வளவு நாட்கள் தாமதமானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே ஹன்சிகாவின் கால்ஷீட்டை உடனடியாக பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி புகார் சிம்புவின் தூண்டுதல் காரணமா

Tags: , , ,

Leave a Reply