சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வந்த நாய்!

dogபிரான்ஸில் தன்னுடைய உரிமையாளரை கொன்ற குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒன்பது வயது நாயொன்று நீதிமன்றத்துக்கு சாட்சி அளிக்க அழைத்துவரப்பட்டது.

பிரான்ஸில் தன்னுடைய உரிமையாளருடன் வசித்துவந்த 9 வயது லாப்ரடார் வகை நாயொன்று, அவரது உரிமையாளர் கொலை செய்யப்பட்ட பிறகு, குற்றவாளியை அடையலாம் காட்டி, சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டது.

மர்மமான முறையில் இறந்துக்கிடந்த நாயின் உரிமையாளர் குறித்த வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

நாயிடமிருந்து வெளிப்படும் எதிர்வினையை வைத்து யார் குற்றவாளி என்று அறிந்து கொள்ள, கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சாட்சி அளிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் நாய்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது என்பது புதிதல்ல.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஸ்கூபி என்னும் நாய்தான் குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக நீதிமன்றத்திற்குச் அழைத்து வரப்பட்ட முதல் நாயாகும். வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்த நபர்களை பார்த்த நாய், குற்றவாளியை பார்த்த போது, வெறித்தனமாக அந்த நபரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.

Tags: , ,

Leave a Reply