நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல் இடம் பெற்றதாகவும் அதில் புலிகளின் தலைவர் எனப்பட்ட மூன்று தலைவர்கள் சுடப்பட்டதாக அறிவித்து ஒரு இராணுவச் சிப்பாயும் இறந்ததாக கூறியது இராணுவம்.
பின்னர் இறந்த இராணுவம் பயிற்சியின் போது இறந்ததாக கூறியது இதில் இருந்து ஒரு விடயம் தொளிவாகப் புலப்படுகிறது இராணுவ நாடகத்தில் இறந்ததாக கூறிய இராணுவ வீரரின் இடத்தை முன்னர் திட்டமிட வில்லை
யுத்தம் உக்கிரமடைந்த கடந்த காலங்களிலும் இறந்த விடுதலைப்புலி என்றால் அதன் படங்களை வெளியிடுவதில் விரைந்து செயற்பட்ட இராணுவம் இங்கு கொலை செய்யப்பட்ட புலிகளின் தலைவர்கள் என கூறும் மூவரின் படங்களை இன் நிமிடம் வரை வெளியிடவில்லை? இதுவும் புதிராக உள்ளது
புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் சண்டை இடம் பெற்றதாகவும் அதில் 2000 இராணுவம் பங்கு பற்றியதாகவும் இராணுவ தலைமையகம் செய்தி வெளியிட்டது. இது என்ன விடயம் என இராணுவ ஆய்வாளர்கள் வினவுகின்றனர் காரணம் இராணுவத் தொகைக்கு ஏற்ற துப்பாக்கி சத்தங்கள் அந்தப் பகுதியில் இடம் பெற்றதற்கான எந்த ஒரு முக்கிய தடயங்களும் கிடைக்க வில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.
சில வேளை புதிய நாள் அரம்பிக்கும் போது வேறு மூவரது உடலங்களை இறந்ததாக காட்டுவதற்கும் வாய்ப்புள்ளது இலங்கை இராணுவ வரலாற்றில் பல உண்மைக்குப் புறம்பான செயல்கள் எல்லாம் நடந்த நிலையில் இவ் விடயம் எல்லாவற்றையும் கடந்த குறும் படம் எனலாம்.
















