அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் நேற்று வியாழக்கிழமை லாஸ் வெகாஸிலுள்ள ஹோட்டலொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, அவரை நோக்கி கூட்டத்திலிருந்த பெண்ணொருவர் பாதணியை வீசியுள்ளார்.
ஆனால் அந்த பாதணி ஹிலாரி கிளின்டன் (66 வயது) மீது மோதாமல் விலகிச் சென்றுள்ளது.
ஆனால் அந்த பாதணி ஹிலாரி கிளின்டன் (66 வயது) மீது மோதாமல் விலகிச் சென்றுள்ளது.
இந்நிலையில் ஹிலாரி கிளின்டன் அந்த பாதணி வீச்சை பொருட்படுத்தாது தொடர்ந்து உரையாற்றியுள்ளார்.
ஸ்கார்ப் மீள் சுழற்சி தொழிற்துறை நிறுவக கூட்டத்தில் கல்நத கொண்டு ஹிலாரி கிளின்டன் உரையாற்றுகையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதணி வீச்சை நடத்திய பெண் உடனடியாக இரகசிய பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த பெண் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி சீட்டைப் பெற்றிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
















