தமிழீழத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனி ஈழம் என்பது நம்முடைய கொள்கை. ஆனால், நம்முடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இந்தக் கொள்கையை ஏற்க வேண்டும் என நாம் கருத முடியாது.
மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும் என்ற பொதுவான நோக்கத்துடன் நாம் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு நரேந்திர மோடி அரசுதான் முழுமையான, பாதுகாப்பான அரசு என்பதை பல்வேறு புள்ளி விவரங்களுடன என்னால் தெரிவிக்க முடியும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் மத்திய அரசு நமக்கு இழைத்த துரோகத்தை மோடி ஆட்சிக்கு வந்தால் செய்ய மாட்டார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
















