நைஜீரியாவில் 14 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியால் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் Umaru Sani என்ற 35 வயது காவல்துறை அதிகாரி Wasila Umaru என்ற 14 வயது சிறுமியை கடந்த வாரம் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் மணமகன் Umaru Sani தன்னுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து திருமண விருந்து கொடுக்க விரும்பினார். நேற்று நண்பர்கள் 10 பேர் அவரது வீட்டிற்கு வந்தனர். Umaru Sani தனது மனைவியிடம் நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார்.
கட்டாய திருமணம் ஆனதால் திருமணம் நடந்ததில் இருந்து பயங்கர கோபத்தில் இருந்த Wasila Umaru, தனது கணவரையும், அவரது நண்பர்களை பழிவாங்க எண்ணி, கடைக்கு சென்று எலிமருந்து வாங்கிவந்து, கணவருக்கு அவரது நண்பர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த உணவில் கலந்து கொடுத்துவிட்டார். சந்தோஷத்துடன் உணவை ரசித்து சாப்பிட்ட கணவரும் அவரது நண்பர்களும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் என்று உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் கணவரும் அவருடைய மூன்று நண்பர்களும் மரணம் அடைந்துவிட்ட்டனர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, Wasila Umaru , எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் காவல்துறையினர்களிடம், தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததால் கொலை செய்யும் நோக்கத்தோடுதான் விருந்து சாப்பாட்டில் விஷம் கலந்ததாக் எவ்வித பதட்டமும் இன்றி கூறினார். அவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
















