கலிபோர்னியா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் 4அடி முதலை ஒன்று திடீரென புகுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கலிபோர்னியா நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வாடிக்கையாளர்கள் பரபரப்பாக வந்து கொண்டிருந்த நேரத்தில் 4அடி முதலை ஒன்று அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்குள் திடீரென புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காம்ப்ளக்ஸ் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறி அடித்து வெளியே ஓடினர். பின்னர் அதிரடி மீட்புப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்புப்படையினர் விரைந்து வந்து முதலையை பிடித்தனர்.
நான்கு அடி நீளமுள்ள அந்த முதலையின் வாய் பிளாஸ்டிக் டேப்பினால் மூடப்பட்டிருந்தது. இதிலிருந்து இந்த முதலையை யாரோ செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.. அவர்களிடம் இந்த முதலை தப்பித்து வந்திருக்க வேண்டும் என Sgt. Jason Bosworth, of Roseville Police Department அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பிடிபட்ட இந்த முதலை பின்னர் கலிபோர்னியாவில் உள்ள California State Fish and Wildlife அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முதலையை வீட்டில் யார் வளர்த்து வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது
















