தமிழ் மக்கள் புறக்கணிப்பு ;மின்குமிழ்கள் கூடக் கிடைப்பதில்லை என்கிறார் கல்முனை மாநகரசபை எதிரணித் தலைவர்

valpஅம்பாறை, கல்முனையில் உள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களில் மின்விளக்குகளுக்கு பொருத்துவதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒரு தொகை மின்குமிழ்கள் வழங்கப்படுவது வழமை. ஆனால் இதுவரைக்கும் எனக்கு வழங்கப்பட வேண்டிய மின்குமிழ்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு கல்முனை மாநகர சபையின் எதிரணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். கல்முனை மாநகர சபையினால் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள் குறித்து கருத்துத் தெரிரித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது எனக்கு வழங்கப்பட வேண்டிய மின்குமிழ்களை இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கல்முனை மாநகர முதல்வரிடம் நான் கேட்டு வந்துளளேன். அதனைத் தருவதாக உறுதி அளித்திருந்தும் இதுவரைக்கும் எனக்கான எந்தவொரு மின்குமிழ்களும் வழங்கப்படவில்லை.

நேற்றுமுன்தினம் மின்குமிழ்களைப் பெறுவதற்காக நான் கல்முனை மாநகரசபைக்கு சென்று கேட்ட போது முதல்வரின் பிரத்தியேக செயலர் எனக்குரிய மின்குமிழ்கள் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறினார். இது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்ட போது எனக்குத் தரவேண்டிய மின்குமிழ்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இதனால் எனது பிரதேசத்துக்குட்பட்ட தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை என்னால் முழுமையாக செய்ய முடியாமல் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு முதல்வரின் திட்டமிட்ட செயற்பாடுகள் தான் காரணமா? அல்லது அங்கு பணியாற்றும் உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் தான் காரணமா? என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது என்றார்.

Tags: , ,

Leave a Reply