கோச்சடையான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது ஏன்?

Kochadaiyaanரஜினி தீபகா படுகோனே நடித்த கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே அதில் மாற்றம் செய்து புதிய தேதியை அறிவித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு

அதாவது மே 11 ஆம் தேதி என்பதை உறுதியான, இறுதியான தேதியாக அறிவித்துள்ளனர்.

இந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கேள்வி.

கோச்சடையானை வெளியிட, மே 11 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று மக்களை தேர்தல் நடைபெறுவதால், அதற்கு அடுத்தவாரம் என்ற அடிப்படையில்தான் கோச்சடையான் படத்தை மே 1 ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனராம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியிடும் திட்டத்தில் இருந்த ரஜினி தரப்பு, ஆந்திராவின் தேர்தல் தேதிகளை கணக்கில் எடுக்க தவறிவிட்டனர்.

ஆந்திராவில் ஏப்ரல் 30 மற்றும் மே 7 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்ற தகவல் கடைசி நேரத்தில்தான் அவர்களின் கவனத்துக்கு வந்திருக்கிறது. அதன் பிறகே மே 11 ம்தேதிக்கு வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தார்களாம்.

மே 11 ஆம் தேதிக்கு கோச்சடையான் ரிலீஸ் செய்யப்படுவதை ஆந்திராவில் உள்ள விநியோகஸ்தர்கள் வரவேற்றுள்ளனர்.

Tags: , , , ,

Leave a Reply