ரஜினி – மோடி சந்திப்பு: பின்னணி என்ன?

modi_rajani_meeting_002பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிம் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நேற்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

சென்னை – போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நேற்று மாலை 6.35 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.

ரஜினியின் வீட்டுக்குள் மோடியின் கார் மட்டுமே உள்ளே சென்றது. பாஜகவினரின் மற்ற கார்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டன. இந்தச் சந்திப்பில் ரஜினியும் மோடியும் பேசியதன் விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ரஜினியின் இல்லத்துக்குச் சென்று திரும்புவதற்குள், ரஜினி உடனான சந்திப்பின் புகைப்படப் பதிவு உடனடியாக மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது. ‘ரஜினி உடன்’ என்று பதிவிடப்பட்ட மோடியின் அந்த ட்வீட், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர்.

எனினும் இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. நான் மருத்துவமனையில் இருந்தபோது, என் உடல் நிலை குறித்து வாரம்தோறும் தொலைபேசி மூலம் விசாரித்தார். அப்போது, என் இல்லத்துக்கு தேநீர் அருந்த வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன்.

என்னை இங்கு அவர் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவரது நலம் விரும்பி. அவர் என்னுடைய நலம் விரும்பி ஆவார்.

இந்தியாவில் வலுவான தலைவர் மோடி. அவர் திறமையான நிர்வாகியும் கூட. அவருக்கு எனது வாழ்த்துகள். எல்லாம் நல்லபடி நடக்கவும், அவரது எதிர்காலம் சிறக்கவும், அவர் நினைப்பது வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply