இந்தி திரையுலகின் கனவுக் கன்னியாக வலம் வந்த பிரபல நடிகை ஹேமமாலினி முகத்தை மூடியபடி பிரசாரம் செய்து வருகிறார்.
உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார்.
மத்திய விமானத் துறை அமைச்சர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சவுத்ரி, ராஷ்டிரிய லோக் தள கட்சியின் சார்பில் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரபலமான தலைவரை எதிர்த்து போட்டியிடுவதால் போட்டி கடுமையாக உள்ளது.
எனவே தெரு தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருவதுடன், பிருந்தாவனம் அமைந்துள்ள பகுதியையும், யமுனை நதியையும் தூய்மையாக்கி காட்டுவேன் என உறுதியளித்து வருகிறார்.
இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் பிரசாரம் செய்ய மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாரத்தின் போது ரசிகர்கள் பலர் பூக்களை வீசுவதாலும், தாறுமாறாக மாலைகள் வந்து விழுவதாலும் மிகவும் சங்கடப்படுகிறாராம்.
எனவே சூரிய கதிர்களிலிருந்து பாதுகாத்து கொள்ளவும், ரசிகர்கள் வீசும் பூக்களிலிருந்து தப்பிக்கவும், தனது முகத்தை சேலையால் மறைத்தபடி பிரசாரம் செய்து வருகிறார்.
















