மே மாதத்தின் இறுதி வாரத்தில் வடக்குக்கு வருகிறார் ராமபோ­ஷ; அரசு -கூட்டமைப்பு பேச்சுக் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்

tnalogo2தென்னாபிரிக்க அரசின் விசேட பிரதிநிதி சிறில் ராமபோ­ஷ எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். இவர் தென்னாபிரிக்க அரசால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியாவார்.

இங்கு வரும் சிறில் ராமபோ­ஷ கள நிலைமைகளை நேரடியாக ஆராய்வதோடு, தமிழ் சிவில் சமூக, அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுவார். அதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுத் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். இது குறித்து “உதயனுக்கு’ கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், “”சிறில்ராமபோஷயின் வருகையின் போது இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சு ஆரம்பிப்பதற்காக கலந்துரையாடல்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

தென்னாபிரிக்க பயணம் தென்னாபிரிக்க அரசின் அழைப்பை ஏற்று கடந்த 9 ஆம் திகதி தென்னாபிரிக்கா பயணமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலாநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு நேற்றுக் காலை நாடு திரும்பியது. இந்தக் குழுவின் தென்னாபிரிக்கப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், “”இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே தென்னாபிரிக்க அரசு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட பிரதிநிதியான சிறில் ராமபோஷயை நியமித்தது. எமது பயணத்தின் போது விசேட பிரதிநிதியான சிறில் ரமபோஷ மற்றும் தென்னாபிரிக்க அரசின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தினோம். பயணத்தின் பலன் “”குறித்த சந்திப்புக்களின் போது நாம் தமிழர் தரப்பு நியாயங்களை முன்வைத்தோம். இந்திய இலங்கை ஒப்பந்தம், அதனூடான 13ஆவது திருத்தச் சட்டம், அவற்றுக்கு என்ன நடந்தது, பிரேமதாசா மற்றும் சந்திரிகா ஆகியோரின் காலங்களில் கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்டங்களுக்கு என்ன நடந்தது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நடந்த சர்வகட்சிக் குழுவின் அறிக்கைக்கு நடந்தவை என்பவை தொடர்பாக அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தோம்.

தமிழர் தரப்புக்கள் ஏமாற்றப்பட்டு வருவதை நாம் அவர்களுக்குப் புரிய வைத்தோம். முக்கியமாகத் தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் விடயங்களையும் அவர்களுக்கு எடுத்துக் காட்டினோம். இராணுவ முற்றுகைக்குள்ளான தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வியல், கடத்தல்கள், காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக் கூறினோம். இலங்கை அரசுக்கும், எமக்கும் இடையிலான பேச்சின் போது அனுசரணையாளர்களாக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. தென்னாபிரிக்கா எமது பேச்சுக்கு அனுசரணை வழங்குவதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனெனில் அவர்களும் எம்மைப் போன்று பாதிக்கப்பட்டவர்களே. பல பேச்சுகளில் தோல்வியைச் சந்தித்தவர்களே”‡என்று கூறினார். எப்போது பேச்சு? அப்படியாயின் பேச்சுகள் எப்போது ஆரம்பிக்கும்? என்று கேட்டபோது, “”தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில் ரமபோஷ இலங்கைக்கு வரவுள்ளார். எதிர்வரும் மேமாத இறுதிப் பகுதியில் இங்கு வருவார் என்று எதிர்பார்க்கின்றோம். வடக்கு கிழக்கின் சகல பகுதிகளுக்கும் அவர் பயணம் செய்வார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சகல இடங்களையும் பார்வையிடவுள்ளார். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக அவர் சந்திப்பதுடன், தமிழ் சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார். அவரது இலங்கைப் பயணத்தின் பின்னரே, இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் நடைபெறும்.”என்று பதிலளித்தார். பேச்சு சாந்தியமாகுமா? “”இலங்கை அரசு நாடாளுமன்றத் தெரிவுக் குழு தவிர்ந்த வேறெந்த தீர்வுத் திட்டத்துக்கும் சாதகமான பதில் தராத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகள் எந்தளவுக்கு சாத்தியமாகும்? என்று அவரிடம் நாம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், அதே சந்தேகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இருக்கின்றது. அதனைப் பேசித் தீர்க்க வேண்டியது தென்னாபிரிக்க அரசுதான்” என்று குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply