காபி கப்பில் காட்சியளித்த ஹிட்லர்: பதறிப்போன மக்கள்

hittler_coffecup_003ஜேர்மன் நாட்டில் ஹிட்டலரின் முகத்தை அச்சிட்டு காபி கிண்ணம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் பெலபெல்ட் நகரில், உள்ள மரசாமான் கடையின் உரிமையாளர், சீனா உற்பத்தியாளரிடம் 5000 காபி கிண்ணங்களை தயாரித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து காபி கிண்ணங்களை சீனாவின் உற்பத்தியாளர் இறக்குமதி செய்துள்ளார்.

இதில், நாஜி சர்வாதிகாரியான ஹிட்லரின் முகம், சீனாவின் வடிவமைப்பாளரின் பிழையால் 5000 காபி கிண்ணங்கள் அச்சிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் எவரும் அந்த பிழையினை கவனிக்காமல் இதுவரை 175 கிண்ணங்களை விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில் காபி கிண்ணத்தை வாங்கிய பெண்மணி கூறுகையில், நான் காபி சாப்பிடும்போது இந்த கிண்ணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்றும் என்னால் இதனை நம்பமுடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்காக கடையின் உரிமையாளர், மன்னிப்பு கேட்டதுடன், கிண்ணத்தை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு 20 யூரோ மதிப்புள்ள மாற்று பொருட்கள் வாங்குவதற்கான சீட்டையும் பரிசளித்துள்ளார்.

மேலும் விற்காத மீதியுள்ள அனைத்து காபி கிண்ணங்களையும், அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்து உள்ளனர்.

Tags: , ,

Leave a Reply