இணைய குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை?

internetworldஇணையக் குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 5 வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றில் ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.மாவட்ட நீதிமன்றங்களில் 30 குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இணையத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Tags: , ,

Leave a Reply