தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: “”இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் எப்போதும் ஒரே கொள்கையைக் கடைப்பிடித்திராத ஜெயலலிதா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.
இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைதுசெய்யுமாறு கோரியவரும் ஜெயலலிதா தான். ஆனால் தற்போது அவர் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதைப் போல நடித்து, ஏனையவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்” என்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.